Sunday, March 17, 2013

காயம் பட்ட நொடிகளில் இயல்பாக இருக்க எத்தனித்து என் இயல்பு தொலைந்து போனதே நிஜம்.

Sunday, June 6, 2010

இந்த பொருள் விற்பனைக்கு...

என் தினமுமான ரயில் பயணங்களில்... எத்தனையோ மனிதர்கள் .... சோகமாய், சந்தோசமாய், அழுகயாய், சிரிப்பாய், அழுக்காய், அதி நவீனமாய்... ஆனால் அனைவரும் அவசரமாய்... அவர்கள் என் இருபது நிமிட நண்பர்கள்...

இவர்களுடன் நானும் ஒருத்தி...

எனக்கு பரிச்சயம் இல்லாத, ஆனால் ஆழ பதிந்த என் நினைவில் சில முகங்கள்...
பரட்டை தலை, நல்லிந்த உடம்பு, அழுக்கு உடை, அமைதியான முகம்... அம்மா... தாயே... இது தான் இவர்களின் விற்பனை பொருள்... வாங்க தேவை இல்லை... ஆனால் இந்த பொருள் விற்பனைக்கு... விரும்பியோர் விலை கொடுக்கலாம்... அதிக பட்சம் 50 பைசா... போடுவோர் சிலர்... "கை கால் நல்லா தானே இருக்கு... உழைச்சு பிழைச்சா என்ன கேடு..." இலவச ஆலோசனையுடன் பலர்... ஒரு நாளின் அவர்களுடைய சம்பளம் இருபது ரூபாயை தொட்டால் அது அதிகம்...

நான் நினைத்துக் கொண்டேன்... என் அப்பா வாத்தியார்... அதனால் என்ன படிக்க வச்சாங்க... அவர் அப்பா என்னவா இருந்தார்னு யாருக்கு தெரியும்...

இந்த விற்பனை பொருளுக்கு முடிந்தவரை விலை கொடுங்க...நியாயமாக இருந்தால்...

என்னை பாதித்த பல விசயங்களில் இதுவும் ஒன்று...இந்த சில நிமிடம் உங்களையும் பாதித்தால், நான் மனிதன் என்ற உண்மை உங்களுக்கு புரியும்...

Friday, June 4, 2010

பள்ளி பருவ கிருக்கல்கள்

என் இமை மூடும் இரவுகளில்... என் இதயம் மோதியவளே...
அதில் மழை நேர மேகமாய் மறைந்து போனவளே...
கடற்கரை மணலில் உன் காலடி தடம் பார்த்த நான்...
கரை வாசலிலே காத்திருக்கிறேன் கனவுகளோடு...